முத்தமிழில் ஒன்றான கூத்து. நாடகமாகப் பரிணமித்து திரைப்படமாக உருவெடுத்த காலத்தில் விடுதலை வேள்விக்குத் தொடர்ந்து துணை நின்றது. திராவிட இயக்கம் வளர்ந்தபோது, புதிய அரசியலை வென்றெடுக்க உதவியது. கலைஞர்களை, கலைகளைக் கொஞ்சம் வளர்த்து, கனவுகளை ஏராளமாக வளர்த்தது. எல்லா வயதினரும் இந்த ‘சினிமா நூற்றாண்டி’ன் இன்றைக்கும், கோடம்பாக்கமாக இருந்து கோலிவுட்டாக மாறிவிட்ட சென்னையின் கனவுத் தொழிற்சாலைக்கு விரைந்து கரைக்கிறார்கள். உலகில் ஏழு விதமான திரைக்கதைகளே உண்டு என்பார்கள். அவைகளை அடிப்படையாய் வைத்தே ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வந்துவிட்டன. அத்தனை பற்றியும் சொல்ல முடியாவிட்டாலும் 1960-70களின் பல திரைப்படங்கள் மொழி, இசை, நாட்டியம், அரசியல், தொன்மம், காவியங்கள், இலக்கியங்கள் இவற்றைப் பராமரிப்பதில் செய்துள்ள பங்களிப்பினை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை.