அடேலியின் பனிமலைப் பயணம் குழந்தைகளின் கற்பனையையும் சிந்தனையையும் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்ட அழகிய வண்ணப் படக்கதைத் தொகுப்பு. இதில் அடேலியின் பனிமலைப் பயணம், பஞ்சு குரங்கின் கதை, ஆளு ஆமையின் கடல் பயணம் என மூன்று சுவாரசியமான கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் குழந்தைகளை புதிய உலகங்களுக்குள் அழைத்துச் செல்வதோடு, இயற்கை, நட்பு, துணிவு, ஆர்வம் போன்ற பல்வேறு மதிப்புகளை இயல்பாக அறிமுகப்படுத்துகிறது. முழுக்க முழுக்க வண்ணப் படங்களுடன், குழந்தைகளைக் கவரும் வகையில் ஒவ்வொரு பக்கமும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையின் முடிவிலும் குழந்தைகளின் சிந்தனையை வளர்க்கவும், கேள்வி கேட்கவும், கற்பனையை விரிவுபடுத்தவும் உதவும் ஆர்வமூட்டும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.