செங்காந்தன் வீரராகவன்(தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதாளர்) எழுதிய "யுக் டிக் பென்சில்" எனும் நூலானது எம் பள்ளிக் மைத்தைகளின் சிந்தனையின் கிளைகளில் இருந்து பூத்தது. இந்தப் பூக்களின் வாசம் தமிழ் நலம் முழுவதும் உள்ள குழந்தைகளின் சுவாசங்களில் புதுப் புத்துணர்வை உண்டாக்கப் புத்தம்புதுப் பூக்கள் பூத்துத் தமிழ்ச் சோலையாக மலரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
காந்தியக் கவிஞரைப் பெற்றெடுத்த மோகலூர் மண்ணில் பிறந்த மாணவச் செல்வங்களே, உங்களது இச்சீரிய முயற்சி மண்ணில் வாகைசூடி வலம்வந்து புலம் செழிக்கும் என்பதலே எமக்கேதும் ஐயப்பாடு என் முனையனவும் இல்லை.மாணவிகள் நீங்கள் இன்று தொடங்கி நிற்கும் இக்கவிப்புள்ளி விரைந்து விரிந்து நமது தாய் மண்ணில் தமிழ் மணம் பரப்பிடும் வண்ணம் எழிற்கோலங்களாக மலரட்டும்.