துருக்கியில் உள்ள "எஸ்கி ஷஹர்" எனும் ஊரில் முல்லா நஸ்ருதீன் அவர்கள் பிறந்தாலும் கல்வியில் சிறந்தவராகவும், அறிஞராகவும் போற்றப்படும் இவர் எல்லாநாட்டினரும் கொண்டாடப்படக்கூடிய அளவிற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்.
சிறுவயதிலிருந்து சற்று மாறுபாடுக் கருத்துக்களோடு சிந்தித்தித்து செயல்படக்கூடியவர். தன்னுடையக கதைகளின் மூலமாக நீதியையும், அறக்கருத்துக்களையும் வலியுறுத்தக்கூடியவர். முல்லா நஸ்ருதீன் சிறந்த கவிஞராகவும், நகைச்சுவையாக கவிதை எழுதுவதிலும், பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகளே சான்றாகும்.