அறிவோம் ஆளுமை என்பது 12 முக்கியமான ஆளுமைகளின் வாழ்க்கை, சிந்தனை மற்றும் சமூகப் பங்களிப்பை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் கலந்துரையாடல் வடிவிலான தொகுப்பு. சாவித்திரிபாய் பூலே, காந்தி, சேகுவேரா, பெரியார், டாக்டர் முத்துலட்சுமி, ஜானகி அம்மாள், மலாலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சமூகத்திற்காக வாழ்ந்த ஆளுமைகளின் வாழ்க்கையை குழந்தைகள் அறிந்துகொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
தங்களுக்காக மட்டுமல்லாமல், தங்களைச் சுற்றியுள்ள சமூகத்திற்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தையும், சமூகத்தைப் பற்றிய புதிய பார்வையையும் இந்த ஆளுமைகளின் வாழ்க்கை குழந்தைகளுக்குள் உருவாக்கும். அவர்களின் சிந்தனைகளை வாசிப்பதன் மூலம் கேள்வி கேட்கும் திறன், சிந்திக்கும் திறன், சமூக அக்கறை மற்றும் நேர்மறையான அணுகுமுறை ஆகியவை வளர வாய்ப்பளிக்கிறது. உரையாடல் வடிவில் அமைந்திருப்பதால் எளிமையாகவும் சுவாரசியமாகவும் வாசிக்க முடியும். ஒவ்வொரு குழந்தையும் அறிந்துகொள்ள வேண்டிய மனிதர்களை அறிமுகப்படுத்தும், சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் தூண்டும் முக்கியமான வாசிப்பு.