டாட்டூ ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் மனதில் பதிந்திருக்கும் ஆழமான அனுபவங்களும், அவை அவனது கனவுகளிலும் நினைவுகளிலும் ஏற்படுத்தும் தாக்கங்களும் பின்னிப்பிணைந்த உளவியல் நாவல். ஒரு இளம் பெண்ணின் உலகத்தை அவளது பார்வையிலேயே அணுகி, அவள் மனதிற்குள் இருக்கும் கேள்விகள், அச்சங்கள் மற்றும் சொல்லப்படாத உணர்வுகளை நுட்பமாகப் பதிவு செய்கிறது. உளவியலையும் Magical Realism-ஐயும் இணைத்து, யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான ஒரு தனித்துவமான உலகத்தை உருவாக்குகிறது. இளையோர் மட்டுமல்லாமல், அவர்களைப் புரிந்துகொள்ள விரும்பும் பெரியவர்களையும் சிந்திக்க வைக்கும் படைப்பு.