அண்ணாந்து பார்த்து மிரட்சியடைவதற்கானதல்ல நவீன கவிதை. அதைப் புரிந்துகொண்டால் நம் குழந்தையைப் போல நம் கையைப் பிடித்துக் கொண்டே நம்முடன் வரும். அதைப் புரிந்து கொள்வதற்கு விளக்கவுரைகளை நாடாமல், நம்முடைய சொந்த வாழ்வைக் கொண்டே புரிந்து கொள்ள முயல்வதே சரியான வழி. வாழ்க்கையே எல்லாவற்றையும் கற்றுத் தருகிறது. கவிதையை அணுகவும் அதுவே கற்றுத் தரும். வாழ்வு ஒருபக்கம் புரிந்துகொள்ளப்பட முடியாததாக இருக்கிறது. அதே சமயம், அதுவே கவிதைகளைப் புரிந்து கொள்வதற்கான உரைகல்லாகவும் இருக்கிறது. இந்த முரண்நகையைத் தன்னுள் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டேயிருக்கும் இந்த விந்தையான வாழ்வின் வெளிச்சத்தில் கவிதையை அணுக முயல்பவையே இக்கட்டுரைகள்.