மு.வ. உரைக்கு முன்னும் பின்னும் தோராயமாகத் தமிழில் நானூறு உரைகள் திருக்குறளுக்கு வெளிவந்துள்ளன. இருந்தபோதும் மேலும் மேலும் திருக்குறளுக்குப் புதிய உரைகள் தோன்றிய வண்ணம் உள்ளன. அவற்றிலும் புதிய கருத்துக்களும், பொருள்களும் தோன்றுகின்றன.
'மொழி ஞாயிறு' தேவநேயப் பாவாணர் ஐயா அவர்களின் வழிவந்த உரையாசிரியர் க.முத்துச்சாமி, இந்த உரையை மிகவும் நுணுக்கமாகவும், பலவகையிலும் ஆய்வு செய்தும், தமிழ் உலகம் திருக்குறளைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் எளிமையாகவும் எழுதியுள்ளார்.
-ப.வெ.வெ. பழனிச்சாமி என்ற இளவரசு