திருக்குறள் - செம்பதிப்பு பொருட்பால் இரண்டாம் மடலம் 410க்கும் மேற்பட்ட பாடவேறுபாடுகளை ஆராய்ந்து முடிவு கூறும் ஒருநூல். வ.உ.சி.யார் அவர்களைத் தொடர்ந்து திருக்குறள் செம்பதிப்பு என்ற பெயரில் பேரளவிற்கான பதிவை இப்பதிப்பே கொண்டுள்ளது. செம்பதிப்பு என்ற பெயரால் வெளிவரும் முதற்பதிப்பு இதுவே ஆகும்.
அறத்துப்பாலுக்கும் காமத்துப்பாலுக்கும் இவ்வாறே செம்பதிப்புக்கள் பேராசிரியர் க.முத்துச்சாமியால் வெளியிடப் பெற்றுள்ளன. இவர் தொல்காப்பியத்திற்கும் நான்கு மடலங்களாகச் செம்பதிப்பு வெளியிடவிருக்கின்றார். பேராசிரியர் க.முத்துச்சாமி இருபத்தைந்து நூல்களின் ஆசிரியர். இவருக்குத் தமிழ்நாடு அரசு 2023இல் மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியுள்ளது.