நாட்டில் அறம், பொருள், இன்பம் நிலைக்க வேண்டும் என்னும் கருத்தில் திருவள்ளுவர் திருக்குறளைத் தமிழ் மக்களுக்குக் கொடுத்தார். எப்படி இறை நம்பிக்கை கொண்டவன் தவறு செய்ய அஞ்சுவானோ அதேபோல் திருக்குறள் படித்தவனும் தவறு செய்யமாட்டான் என்று நம்பிக்கை கொள்ளலாம். நல்ல குடிமகனாய் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் திருக்குறளைப் படித்தே ஆகவேண்டும்.
'மொழி ஞாயிறு' தேவநேயப் பாவாணர் ஐயா அவர்களின் வழிவந்த உரையாசிரியர் க.முத்துச்சாமி, இந்த உரையை © மிகவும் நுணுக்கமாகவும், பலவகையிலும் ஆய்வு செய்தும், தமிழ் உலகம் திருக்குறளைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் எளிமையாகவும் எழுதியுள்ளார்.
-ப.வெ.வெ.பழனிச்சாமி என்ற இளவரசு