கலைஞரும் எம்.ஜ.ஆரும்; சிவாஜியும் கண்ணதாசனும்; பாரதிராஜாவும் இளையராஜாவும்; ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறுஅறிமுகம் ஆகும் போது. நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாதது. பெரிய மனிதர்கள். சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது.
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை, ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
நெகிழ்ச்சியும், கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.