துன்பம் வரும் வேளையிலே சிரிங்க...!”
நமது முன்னோர்களோ துன்பம் வரும் வேளையில் கூட சிரிங்க அந்த துன்பம் கூட பறந்து போகும் என்று தான் சொல்லிக்கொடுத்து தான் வளர்த்தார்கள். இருப்பினும் சமீபத்திய காலத்தில் மன அழுத்தத்தால் உயிரை விட்டவர்கள் ஏராளம். அதுதான் மற்ற அனைத்து நோய்களுகளையும் வரவேற்கும் வரவேற்பாளராக உடலில் தங்கிவாழ்கிறது. இந்த மன அழுத்தத்தை விரட்டிவிட்டால், நோய் நம்மை அண்டாது.
இந்த மன அழுத்தத்தை விரட்டும் மகத்தான மருந்து 'சிரிப்பு'.
உலகம் போகும் வேகத்தை பார்க்கையில் துன்பம் எது இன்பம் எது என்பதனை தெரிந்துக்கொள்ள வரும் தலைமுறையினருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. பிற இனங்களிலிருந்து மனித இனத்தைப் பிரித்து அறிய உதவும் கூறுகளுள் ஒன்று சிரிப்பு. விலங்குகளால், பறவைகளால் சிரிக்க முடியாது. பிற இனங்களைவிட மனித இனம் மட்டுமே சிறப்பாகப் பெற்றள்ள கூடுதல் தகுதி இந்தச் சிரிப்புத்தான்.