ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
விநாயகர் முழுமுதற் கடவுள். எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை முதலில் வணங்கி விட்டுத் தொடங்கினால்தான் சிறப்பாக அமையும். எந்தத் தெய்வத்தை வணங்குவதாகயிருந்தாலும் விநாயகரை முதலில் வணங்கி விட்டுச் சென்றால்தான் வழிபாடு நிறைவாக அமையும். அதனால் ஆதிசங்கரர் ஷண்மதங்களை நெறிப் படுத்தியபோது கணபதி வழிபாடான காணாபத்யத்தை முதலில் வைத்தார்.