46 அத்தியாயங்களின் தன் வாழ்க்கையின் சுவாரஸ்யமான பகுதிகளை நமக்குத் திறந்து வைக்கிறார் ரா.கி.ர. இந்தப் புத்தகத்தின் மூலம். அவரது சிறு வயது அனுபவங்களில் தொடங்கி, பத்திரிகை உலகில் சாதித்தது வரையிலான அனுபவக் குவியலில் நாம் கற்றுக் கொள்ளவும் எடுத்துக் கொள்ளவுமான விஷயங்கள் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. கண்ணதாசனின் ‘வனவாசம்’ நூலைப் பின்பற்றி, தன்னை அவன் என்று குறிப்பிட்டே இந்தப் புத்தகத்தை எழுதியதாக ரா.கி.ர. குறிப்பிடுகிறார். அவனாகிய இவர் வாசகர்களுக்கு வழங்கியிருப்பது ஒரு பயனுள்ள புத்தகத்தை.