லெலின் தலைமையில் சோவியத் ருஷ்யா உருவான நாள் தொடங்கி சண்டை சச்சரவு, கோஷ்டி மோதல், யார் ஆளுவது, பிற தேசங்களின் அச்சுறுத்தல், பொருளாதார மந்த நிலை, பாழ்பட்டு, பண்ணை அடிமைகளாய், விவசாயிகளும், கொத்தடிமைகளாய் தொழிலாளர்களும் போகப் பொருளாய் பெண்ணடிமைகளும் நிறைந்த தேசமதை தூக்கி அனைத்து சவால்களையும் எதிர் நின்று போராடியவர் ஸ்டாலின் என்றால் மிகையாகாது.அவரது மார்க்ஸிய, லெனினிய சித்தாந்த கனவு இன்று அங்கு நிறைவேற காரணமாயிருந்த முன்னோடிகளில் ஸ்டாலினும் குறிப்பிடத்தக்கவர்.