புரட்சி என்பது உலகத்தின் ஒரு சட்டம். அது மனித வர்க்க முன்னேற்றத்தின் ரகசியம். இதிலே புனிதத்துவச் சங்கிலிகள் பிணைக்கப்பட வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. தனி நபர்களைப் பழி வாங்கும் நோக்கமும் புரட்சி நடவடிக்கைகளின் அம்சமாகாது. துப்பாக்கிகளாலும் வெடிகுண்டுகளாலும் தான் இதைச் சாதிக்க வேண்டுமென்பதில்லை.