பிற்காலச் சோழர் காலக் கோயில்கள் நிலவுடைமை நிறுவளங்களாகவும், மேலாண்மை அமைப்புகளாகவும் நாட்டின் கருவூலங்களாகவும் கலைக்கூடங்களாகவும் கல்விச் சாலைகளாகவும் மருத்துவமனைகளாகவும் கடன் தரும் வங்கிகளாகவும் வேலை தரும் அமைப்புகளாகவும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இயைந்திருந்தன. இவ்வாறு ஒரு பெரிய சமூக நிறுவனமாக விளங்கிய சோழர் காலக் கோவில்களின் பொருளியலுக்கும், சோழர்கால நிலவுடைமைக்கும் இடையிலான உறவை. மிக நுணுக்கமாக இந்நூல் ஆராய்கிறது.