நல்ல நூல்களைப் படியப்பா நாளும் அறிவு ஊறிடுமே மேலும் படிக்கத் தூண்டுமே மேதினியில் பழக்கம் போலுண்டோ? நூல்கள் பலப்பல உண்டப்பா சாலவும் நல்ல நூல்களையே காலை மாலை படித்திடுவாய் கல்வியில் பெரியோன் ஆகிடுவாய். முன்னால் வாழ்ந்த பெரியோர்கள் தன்னாலான நூல்கள் எல்லாம் பின்னால் வரும் மக்களுக்குப் பேணி வைத்தார் பெரும்பொருளாய். கொன்னே கொன்னே வாழ்நாளைப் பின்னே என்று பேதைமையால் பன்னும் பனுவலைப் படிக்காமல் பலரும் நகைக்க வாழாதே. வள்ளுவர் குறளை வாழ்க்கியிலே வளமாய் நீயும் கற்றிடுவாய் உள்ளத் தூய்மை பெற்றிடுவாய் உண்மை நெறியில் நின்றிடுவாய்.