போலிஸாரால் தேடப்பட்டு வரும் கள்வன் ஒருவனின் படத்தையும். அவனுடைய அங்க அடையங்களின் விவரங்களையும் சுவரொட்டி ஒன்றில் காண்கின்றார்கள்; உடனே அவனைத் தேடிப் பிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபடிகின்றார்கள். சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க அடையாளங்கள் யாவும் பொருந்திய ஒரு மனிதனைக் கண்டுபிடித்து, அவன் இருக்குமிடத்தைப் போலீஸ்காரர் ஒருவரிடம் தெரிவிக்கின்றார்கள். ஆனால், அந்த போலீஸ்காரர். அவர்கள் அதிர்ச்சியடையும்படி செய்தி ஒன்றைச் சொல்கிறார்.அது என்ன? அந்த ஆறு சிறுவர்களும் கண்டுபிடித்த அந்த மனிதன் யார்? பதிலை அறியப் பக்கங்களைப் புரட்டுங்கள்; படித்துப் பாருங்கள். எளிய, இனிய நடையில் வித்துவான் திரு.வி. நரசிம்மன் அவர்கள் இக்கதையை எழுதியிருக்கின்றார்கள்.