பேரசிரியர் ப. மருதநாயகம் ஆங்கிலம், தமிழ், அமெரிக்க இலக்கியம் ஆகிய அமெரிக்க நாட்டு ஹவாயி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலைப்பட்டங்களும் மூன்றிலும் முறையே சென்னைப்பல்கலைக்கழகம். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தொன்மத் திறனாய்வு பற்றிய ஆய்வேட்டிற்காக ஆங்கிலத்தில் முனைவர் பட்டமும், தெ.பொ.மீ. பற்றிய ஆய்வேட்டிற்காகத் தமிழில் முனைவர் பட்டமும், 'தமிழ்ச்செவ்விலக்கியங்கள் ஒப்பியல் பார்லை' என்னும் ஆங்கிலக்கட்டுரைத் தொகுதிக்காகப் புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தின் முதல் டி.லிட் பட்டமும் பெற்றவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஆங்கிலப் பேராசிரியராகக் கடமை ஆற்றியுள்ளார். புதுவைப்பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்றபின் புதுவைமொழிவியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் பணிபுரித்தார் பன்னிரண்டு ஆண்டுகள் செம்மொழித் தமிழாய்வு மொரீசியசில் உள்ள நடுவண் நிறுவனத்தில் ஆய்வுத்தகைஞராகச் செயல்பட்டார். மகாத்மா காந்தி உயர்கல்வி நிறுவனத்தின் பேரறிஞர் அண்ணா இருக்கைப் பேராசிரியராக முதன் முதலில் அழைக்கப்பெற்று அண்ணா பிறந்தநாள் சொற்பொழிவை நிகழ்த்தியதோடு அண்ணா பற்றிய நூல்கள் வெளிவருவதற்கான திட்டப்பணிகளை வடிவமைத்துத் தந்தார். கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழகம், பிரெஞ்சு ரென் பல்கலைக்கழகம், ரீயூனியன் பல்களைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம், ஜெர்மனியின் ஹைடெல்பர்க் பல்கலைக்கழகம். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆய்வுமேற்கொண்டு சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார். வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, பால்டிமோர் (3005), ராலே (20) சார்ல்ஸ்டன்(2011), வாசிங்டன் (2013) பால்டிமோர் (2017), உல்லஸ் (2018) ஆகிய நகரங்களில் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் புறநானூறு, திருக்குறன், குறிஞ்சிப்பாட்டு, தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணி குறுந்தொகை, போன்ற தலைப்புகளில் அவரால் கட்டுரைகள் வழங்கப்பெற்றன. ஆக்ஸ்போர்டு பாட்லியன் நூல்கத்திலும், லண்டன் பிரிட்டிஷ் நூலகத்திலும் எஃப்.டபிள்யூ. எல்லிசின் கையெழுத்துப் பிரதிகளை ஆய்வுசெய்து அன்னாரின் மூன்று அதிகாரத் திருக்குறன் மொழிபெயர்ப்பு நூலையும், தமிழ் யாப்பிலக்கணம் பற்றிய ஆங்கில நூலையும் பதிப்பித்துள்ளார். சாகித்திய அகாடெமி வெளியிட்ட தொகுதிகளில் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ்க்கவிதைகள், கட்டுரைகள், நாவல்பகுதிகள் பல இடம்பெற்றுள்ளன. இவருடைய அமெரிக்க, கவடா நாட்டு இலக்கியங்கள் பற்றிய நானூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்து ள்ளன. ஆங்கில, தமிழ், தமிழக, இந்திய, மேலை ஆய்விதழ்களில் இவர் இதுவரை எழுதியுள்ள பதினைந்து ஆங்கில நூல்களும், உலகளாவிய ஒப்பியல் பார்வை கொண்டவை.