தனித்தனியாக வாழ்க்கை ஒழுங்காக இருப்பதுபோலத் தோன்றுகிறது. பைத்தியச்சாமி இந்நேரம் எழுந்து குளத்தில் குளித்து பிள்ளையார் கோயிலுக்குச் சென்று நெற்றி நிறைய திருநீறை வைத்துக்கொண்டு பாஸ்கர் கடைக்குப்போய் ஓசியில் டீ சாப்பிட்டுவிட்டுத் திரும்ப கோயில் மண்டபத்தில் ஏகாந்தமான தியாடத்தில் உட்கார்ந்திருக்கும். இப்படிப் பார்க்கும் போதெல்லாம் வாழ்க்கை எவ்வளவு எளிமையானது என்று தோன்றும். ஆனால் ஒவ்வொரு கரைக்கும் மறுகரை இருப்பதைப்போல வாழ்க்கையின் பிறர் அறியாத மற்றொரு பாகம் அவ்வளவு எளிமையானதும் ஒழுங்கானதும் விரும்பத்தக்கதும் அல்ல.