''இல்லி ஆஞ்சநேயர் கோயில், சாரி தேவாலயா எல்லிட்டு? '' அந்த ஆட்டோக்காரரிடம் கேட்டபோது என்னுடைய கன்னடம் நிச்சயம் அவரை எரிச்சல் படுத்தியிருக்கும். ''பரவால்ல, தமில்லையே கேளு. ஆஞ்சநேயர் அதோ ஓரமா நிக்காரு பாரு. வேணும்னா போய் கும்பிட்டுக்கோ. அடுத்த வாட்டி நீ கேட்டா அவரும் இங்கு இருக்க மாட்டாரு,'' பேசிக்கொண்டே வாயில் கொஞ்சம் புன்னகையைத் திணித்துக்கொண்டார். ஆமாம்! மெட்ரோ வேலை நடப்பதால் கோயில் இடிக்கப்பட்டு ஆஞ்சநேயர் மட்டும் ஓரமாகத் தனிமையில் யாரோ ஏற்றிய மண்விளக்கின் முன்னே அதே கை கூப்பிய நிலையில் நின்றுகொண்டிருந்தார்.