உயிர்களின் தோற்றம் குறித்த கல்வி வேதியியல், மூலக்கூற்று உயிரியல், உயிரணு உயிரியல், புவி அறிவியல் மற்றும் வானியல் ஆகிய பல அறிவியல் துறைகளை உள்ளடக்கியது. புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. புவியில் உயிர்களின் தோற்றம் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கிடையே தோன்றியிருக்கலாம் என கருதப்படுகின்றது.