பொறி தெறித்துத் தீப்பற்றித் துவங்கும் அக்னியின் நடனம். கவிதைக் கனல் மூண்டெழுவதும் அப்படித்தான். அந்த நிலையில் தீக்குள் விரலை, ஏன் தேகத்தைத் தந்தாலும் கவிஞன் ஆனந்தம் கொண்டு பித்துநிலை அடைவான் பாரதி போன்றோரு கவிஞன். பாரதிக்கு கவிக்கனல் மூண்ட கணங்களைத் தேடிப்பிடித்து தொகுத்து விரித்துரைத்து களிதுலங்க அளித்திருக்கிறார் இந்நூலை கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி. இது தீயின் சுடரைத் தீண்டும் அனுபவம்.