கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் தமிழ்மொழியின் சொல்வளம் கால மாற்றத்தால் எவ்வாறு சீர்குலைந்துள்ளது என்பதையும், தமிழ் மொழியைக் காக்க நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் இக்கவிதையின் வாயிலாக விளக்குகின்றார். இனிமையும் சொல்வளமும் நிறைந்தது தமிழ்மொழி என்பதை உணர்த்திடவே பாரதி “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே” என்று பாடினான்.