பண்பாட்டு மானிடவியலுடன் நெருக்கமான தொடர்புடைய நாட்டார் வழக்காற்றியல் அறிவுத் துறையில் ஆழ்ந்த புலமையும் பயிற்சியும் உடைய இந்நூலாசிரியர், இலக்கிய மானிடவியல், இலக்கிய இனவரைவியல் என்ற இரு அறிவுத் துறைகளையும் படிமலர்ச்சிக் கோட்பாடு என்ற கோட்பாட்டையும் அறிமுகம் செய்துவிட்டு, இவற்றின் துணையுடன் சங்க இலக்கியங்களையும் இந்நூலில் ஆய்வு செய்துள்ளார். இது, நல்ல முயற்சியாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.
இந்நூல் சங்க இலக்கிய வாசிப்பிற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. அத்துடன் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் பிற அறிவுத் துறைகளின் துணையுடன் குறிப்பாக மானிடவியலின் துணையுடன் செவ்விலக்கியங்களை ஆய்வு செய்யத் தூண்டுவதுடன் வழிகாட்டவும் செய்கிறது.
- ஆ.சிவசுப்பிரமணியன்