ஸ்ரீ ராகவேந்திரரைப் பார்க்க பல ஊர்களிலிருந்தும் பண்டிதர்கள் வருவது உண்டு. அப்படி வந்தவர் சீனிவாசாச்சார்யார். அவரது புலமையைப் பாராட்டிய மகான், தன்னுடன் உணவருந்தும்படி சொன்னார். மூலராமருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட உணவு பரிமாறப்பட்டது. அதில் கடுகு சேர்க்கப்பட்டிருப்பதை பார்த்த சீனிவாசாச்சார்யார் முகம் சுளித்தார். 'ஆஷாட மாதத்தில் கடுகு சேர்த்த உணவைச் சாப்பிடுவது ஆசாரத்துக் எதிரானதாயிற்றே?" என்று குறைப்பட்டார். 'அவ்வளவுதானே..? உங்களுக்கு கடுகு சேர்க்காத உணவைக் கொண்டுவரச் சொல்கிறேன் ' என்று அவருக்கு வேறு உணவை வழங்குச் செய்தார் ஸ்ரீ ராகவேந்திரர். ஆனால், கடுகு சேர்த்த அதே உணவை ஸ்ரீ ராகவேந்திரர் தொடர்ந்து சாப்பிடுவது கண்டு சீனிவாசாச்சார்யார் மனதுக்குள் வருந்தினார். விடைபெறும்போது சீனிவாசாச்சார்யாருக்கு மந்திராட்சதையைப் பிரசாதமாகத் தந்தார் ஸ்ரீ ராகவேந்திரர். ஊருக்குத் திரும்பியதும் அட்சதையை எடுத்துப் பார்த்த சீனிவாசாச்சார்யார் அதிர்ந்தார். மஞ்சள் நிறத்து அட்சதை கருமை நிறமாக மாறியிருந்தது. குருவிடம் ஓடி வந்தர். பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு கோரினார். 'கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவை நீ மனவெறுப்புடன் சாப்பிட்டாய். அதனால் ஏற்பட்ட விளைவு இது. கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை அரைகுறையாக இருக்கக்கூடாது. முழுமையாக இருக்க வேண்டும்!" என்று சொல்லி , அதே அட்சதையை மீண்டும் ஆசிர்வதித்தார் மகான். அட்சதை பொன்னிறமாகி மிளிர்ந்தது! இது போன்ற மேலும் பல அற்புதங்கள் உள்ளே.....