"கம்ப்யூட்டர் சாதனைகளும் காலத்தின் வேகமும் எட்டமுடியாத உயரத்துக்குப் போய்க் கொண்டிருந்தாலும், நம் புனித பாரதத்தில் ஆன்மீகமும் ஆல் போல் வேர்விட்டுச் செழித்தோங்கியே வளர்ந்து வருகிறது.
ராக்கெட் வேகத்தில் செல்லும் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு, ஆன்மீகத்தின் வளர்ச்சி எந்த வகையிலும் குறைந்ததாகத் தெரியவில்லை! காற்று வாங்குவதற்காகக் கோயில்களுக்கு வருபவர்கள் குறைந்து போய், மனநிம்மதி தேடி வருபவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
'ஆன்மீகத்துக்கென்று சில பக்கங்களை விகடனில் ஒதுக்கலாம்' என்று முடிவெடுத்தபோதுதான், 'சக்தி தரிசனம்' பிறந்தது. அதற்கு வாராவாரம் ஆதரவும் வரவேற்பும் கூடியது.
அதுவே விகடன் பிரசுர வெளியீடாக அவதாரம் எடுத்தபோது, அத்தனை ஆலயங்களையும் ஒரே தொகுப்பில் அடக்குவது என்பது இயலாமல் போனது. அதனால், விகடனில் வெளியான சக்தி தரிசனக் கட்டுரைகள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் தொகுப்பு கடந்த ஏப்ரலில் உங்கள் கையில் தவழ்ந்தது. முதல் தொகுப்பில் மூழ்கித் திளைத்த வாசகப் பெருமக்கள், 'அடுத்த தொகுப்பு எப்போது வெளியாகும்?' என்று ஆவலுடன் எங்களுக்குக் கடி"