1960-70களின் பாளையங்கோட்டையை தன் ஞாபக மொக்குகளில் இருந்து அவிழ்க்கிறார் நூலாசிரியர் ப.இசக்கிராஜன். அட்டையில் திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தை, திறந்து வைத்தபோது, முன்னால் யானை நடந்து செல்ல பின்னால் சுலோச்சன முதலியாரும் ஆங்கிலேய அதிகாரிகளும் தொடர்ந்து செல்கிற காட்சியை வள்ளிநாயகம்) வரைந்து தந்திருக்கிறார்.