புதிய பார்வை', "உங்கள் நூலகம்", 'எர்', 'கணையாழி' ஆகிய இதழ்களில் நாடகவியாளர் மு.இராமசுவாமி எழுதிய 25 திரைப்பட விமர்சனங்களின் தொகுப்பே இந்நூல். படம் பார்க்கப் பார்வையாளரைத் தயார்ப்படுத்துகிற, திரையரங்கை நோக்கி அவர்களைத் தள்ளிவிடுகிற துரித உணவக வகைப் பட்டுவாடாவைச் சேர்ந்ததல்ல இவ்விமரிசனங்கள். ஆற அமரக் காலம் எடுத்துக்கொண்டு.. அணுஅணுவாய் இரசித்து, அதற்குள்ளேயே அமிழ்ந்து நின்று எழுதப்பட்ட விமரிசனங்கள் இவை. ஒரு திரைப்படத்தை எப்படியெப்படியெல்லாம் அசைமுடியும் என்பதற்கு இந்த விமரிசனங்கள் உதவுமாயின், அதுவே இந்த நூலின் பயனாயிருக்கும். பெரும்பாலும் கதையின் அமைப்பைக் கொண்டு செலுத்துகிற, அதற்குள் புதைந்திருக்கும் படிமக் குறியீடுகளை, சமூக, அழகியல் தங்களை, விமரிசனம் என்ற பெயரில் சமூக மேற்தளத்திற்கு எடுத்துக் கோண்டுவருவது மட்டுமே இக்கட்டுரைகளின் நோக்கமாகும்.