"அமைப்பு லாவண்யங்களிலும் கையாளப்படும் அசாதாரண வார்த்தைக்கு மீறிய அதீத
விசயங்களிலும் சிகரங்கள் என்று சொல்லப்படும் கதைகளையும், தமிழ் நாட்டு
ரசிகர்களின் விருப்பு வெறுப்புகளை மதித்துக் கூடுமானவரை ஓரளவு கதைச்சத்து
இருக்கக்கூடிய, ஆனால் அமைப்பு விசேஷங்களுடன் பொருந்திய கதைகளையும்
தேர்ந்தெடுத்துத் தருவதே என் நோக்கம்.
--புதுமைப்பித்தன்.
"மொழிபெயர்ப்பு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிக மிக அவசியம். அதை உணர்ந்து
இலக்கியத் தொண்டின் ஒரு பகுதியாக, ஆரம்ப காலம் முதல் இன்றுவரை ஏதாவது ஒரு
மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தேன்,
--சு.தாசுறுமண்யம்
ஆல்பர்ட் காம்யூ, பால் வான் ஹெய்சே, பிரான்சிஸ் காப்கா, மொப்பஸான்,
க்ராஸியா டெலாடா, ஜான் கால்ஸ்வொர்த்தி, ஜாக் லண்டன், வில்லியம் சரோயன்,
நாதனியேல் ஷாதாரன், எட்கர் ஆலன் போ, சிங்கிளர் லூயிஸ், தாமஸ் வுல்ப்,
லியோனீட் ஆண்ட்ரீல், மாக்சிம் கார்க்கி, மைலக்கேல் ஜோஷெங்கோ.