ஸ்ரீ சைலம் மலையானது, ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டம், நந்தியால் வட்டத்தில் உள்ள கிருஷ்ணாநதியின் தென்கரையில் பல்வேறு மலைச்சிகரங்கள் சூழ்ந்த ஒரு மலைச்சிகரத்தில்,15,000அடி உயரத்தில் ரிஷபகரி '' என்னும் மலைச்சாரலில் உள்ளது. ஸ்ரீ சைலத்தைச் சுற்றிலும் 40 கி.மி தொலைவிற்கு ஒரு சிறு கிராமம் கூடக்கிடையிது. மிருகங்கள் வாழும் மிகப்பெரிய மலைக்காட்டுப் பகுதி இது. சித்தர்கள் விரும்பி உறைகின்ற சித்த மருத்துவ மூலிகைகள் மிகுந்த இடம்.