இலியட் பற்றித்தெரிந்து கொண்டால் நிச்சயமாக நாம் ஆச்சரியப்பட்டுப் போவோம். ஆமாம். காவியம் என்று சொல்லப்படும்
வகையைச் சேர்ந்த நீண்ட கவிதை அது. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது இலியட். ஆமாம். கிறிஸ்து
பிறப்புக்கு 700 ஆண்டுகளுக்கு முன் கிரிஸ்நாட்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு கவிஞரால் இயற்றப்பட்ட காவியம்தான், இலியட். அந்த மகாகவியின் பெயர் ஹோமர். ஹோமரைப் படிப்பவர்கள் முதலில் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியது அவருடைய காலம்தான். காவியங்களின் தந்தை' என்று புகழப்படும் ஹோமர், கண் பார்வையற்றவர் என்றும் சொல்லப்படுகிறது, நம் ஊரில் கண் பார்வையற்றவர்கள் பிச்சையெடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஹோமர், காவியங்களின் கண்களைத் திறந்திருக்கிறார். அயோனா என்ற கிரேக்கக் கடற்கரைதான் அவரது ஊர். இலியட், ஒடிஸி ஆகிய காப்பியங்களை எழுதியவரும் அவரே. அவர் குருடராக இருந்தார் என்றும் நம்பம்மடுகிறது. இலியட், ஒடிஸி ஆகிய காவியங்கள் நம் கையில் இருப்பது கற்பனையல்ல. நிஜம். அவற்றின் சொந்தக்காரர் ஹோமர். இந்த அளவுக்கு நிச்சயம்.
- பதிப்பகத்தார்.