எது நடந்தாலும் அடுத்த நொடி பூமியோ கதிரவனோ நின்று வேடிக்கை பார்ப்பதில்லை..அதே அச்சு..அதே சுழற்சி... ஆனால் .. மனிதர்களுக்கும் அதே அச்சுதானா என்ன..நாம் உணர்வுகளால் கொஞ்சம் அறிவினால் கொஞ்சம் செயல்களால் கொஞ்சம் கட்டமைக்கப் பட்டவர்கள் இல்லையா....
உணவுக்கு முன், உணவுக்குப் பின் என்று மருந்து தரும் வழக்கம் போல் ஒவ்வொரு நடப்புக்கு முன்னும் பின்னும் வேறெங்கோ வேடிக்கை காட்டப்படுவதும், திரை மாறியதும் காட்சி மாறுவதுமான உலகத்தை ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம். முழுவதுமாகப் பொருந்திப்போக அனுமதிக்காத இலக்கிய மனங்களின் நச்சரிப்பாகப் படைப்புகள் எழுகின்றன.
நேற்றைக்கும் இன்றைக்குமாக அலைவுறும் மனம் அது.
சில நேரங்களைப் பிரதி செய்ய வாய்க்கிறது.