பொக்கம் எனும் சொல் - உள்ளீடாக ஒன்றுமற்ற வெற்றிடத்தைக் குறிக்கிறது. பொக்கையும், பொந்தும் இதிலிருந்து உருவான சொற்களாக இருக்கலாம். கம்ப ராமாயணம், பன்னிருதிருமுறைகளில் பொக்கணம் எனும் சொல் பை எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பொக்கணத்தைப் பலவகைக் கட்டுரைகளைக் கொண்ட இலக்கியப் பையாகக் கருதலாம்.