இன்றைய கார்ப்ரேட் காரர்களுக்கு எண்ணற்ற நெறிமுறைகளைக் கடன் கொடுத்தவர்கள் அன்றைய தமிழர்கள்தான். உலகின் முன்னோடியான நம்பகமான கார்ப்ரேட்காரர்கள் தமிழர்கள்தான் என்பதை ஆராரங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம்.
கார்ப்ரேட் என்ற சொல் எவற்றையெல்லாம் உள்ளடக்குமோ, அவற்றையெல்லாம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் செயல்படுத்தி வந்துள்ளனர்.
அந்தச் சொல் தமிழுக்குப் புதிதுதான். ஆனால், அது தரும் பொருள் தமிழுக்கு மிகமிகப் பழையது. நிர்வாகம், மேலாண்மை போன்றன 'கார்ப்ரேடி'ன் அடிநாதங்கள். அவை அனைத்தும் தமிழர்களுக்குத் தலைகீழ்ப் பாடம்.