உரையாட எவரும் அற்ற தனிமை கொண்டவனான கதைநாயகன், தனக்குப் புத்துயிர்ப்புத் தந்த தேவதையாய்க் கொண்டாடும் நஸ்டெங்காவிடம் தன் அக உலகைத் திறந்து காட்டி அன்றாடம் தான் மேற்கொள்ளும் கனவுலக சஞ்சாரத்தை வெள்ளமாய்ப் பொழியும் விவரனை ஒரு துருவமென்றால், எந்த விதமான உலகியல் அனுபவமும் அற்றவளாய்ப் பாட்டியோடு பிணைப்பூசி குத்தப்பட்டு வாழ்ந்து வரும் நஸ்டெங்கா, கபடமற்ற பிள்ளை மொழியில் தன் வாழ்க்கைச் சரிதத்தை அவன் முன் திறந்து காட்டுவது, நேர் எதிரான மற்றொரு துருவம்.