மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பரியத் அவர்களுக்கு யுவபுரஸ்கார் பெற்றுத்தந்த
ஆங்கிலச் சிறுகதை தொகுப்பான Boats on Land புத்தகம் நம்மால் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு நிலத்தில் படகுகள் எனும் சிறுகதைத் தொகுப்பாக நற்றிணை
பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது
முற்றிலும் புதிய நிலப்பகுதியை அறிமுகம் செய்தன இந்தக்கதைகள். பலர்
மொழிபெயர்ப்பு செய்த இந்த மொத்தக்கதைகளையும், தமிழில் வாசிக்கும்போது ஒரே
சீராக வரும்வகையில் மெய்ப்பு நோக்கி கொடுத்ததில் சுசீலாம்மாவின் பங்கு மிக
முக்கியமானது.