அமெரிக்க மண்ணிலே புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினர் எப்படியான வாழ்க்கை வாழப்போகிறார்கள் எங்கள் பண்பாடு கலாச்சாரத்தை இந்த மண்ணிலே மதித்து நடப்பார்களா என்று விடைதெரியாக் கேள்வி பலரின் உள்ளத்தில் எப்பொழுதுமே எழுந்து நிற்கிறது. பல்லின கலாச்சார மாறுபாடிகள் காரணமாக நாங்கள் முடியாது, தவறானது என்று சில சந்தர்ப்பங்களில் நினைத்த சில விடங்கள் முடியக் கூடியதாயும் முடியும் என்று நினைத்த சிலவிடயங்கள் முடியாததாயும், இருப்பதை இந்த மண்ணில் என்னால் அவதானிக்கமுடிந்தது. இந்த மண்ணிலே உள்ள யதார்த்தநிலை என்கண்முன்னால் பசுமையாய் நிழலாடியபோது கற்பனையோடு யதார்த்தத்தையும் இணைத்து ஒரு குறுநாவலை எழுதமுற்பட்டேன். இந்த முயற்சியினால்தான் யதார்த்தமும் கற்பனையும் இணைந்த எங்கே அந்த வெண்ணிலா? என்ற குறுநாவல் உருவெடுத்தது.