தோல்வியும் துன்பமும் துயரமும் உற்ற ஆன்மாவின் மனவெழுச்சிச் சித்திரங்களாக இக்கதை படைக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கைப் போரில் தோல்வி உற்ற ஆனால் தன் மனதுக்குச் சத்தியமாக நடந்து வந்த ஒருவனின் வாழ்க்கை வரலாறும் போற்றுதலுக்கு உள்ளதே என்று உணர்த்தியது நிலவறைக் குறிப்புகள் என்றால் மிகையாகாது.