“நம் நிலம் கவிழ்க்கப்பட்ட காலத்தில், தற்போதைய ஆக்கிரமிப்பு சூழ்நிலைக்கு உகந்த வகையில் இந்த நாவலை எழுதாமல், காலத்திற்கும் அறத்திற்கும் ஏற்ற வகையில் தணிக்கையின்றி எழுதத் துணிந்தேன். இதுவொரு சவாலான பயணம் என்பதை அறிவேன். இதுவொரு ஆபத்தான தீர்மானம் என்பதை அறிவேன். ஆனாலும் என் சௌகரியங்களுக்கு அப்பால், என் பாதுகாப்புகளுக்கு அப்பால், எனக்கும் அப்பால், தாய் நிலத்திற்காகவும் விடுலை அறத்திற்காகவும் வாழவும் எழுதவும் வேண்டும் என்பதுவே என் ஆத்மார்த்தமான வாழ்விலட்சியம்...”
-தீபச்செல்வன்.