பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுவது நீர், நிலம், காற்று, வானம் மற்றும் நெருப்பு. நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலும் மற்றும் செயலும் பஞ்சபூதங்களை சார்ந்ததாகவே இருக்கும். உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பஞ்ச பூதங்களால் தான் என புராணங்களில் சொல்லப்படுகிறது.“பஞ்சபூதத்திக தேவகா” என்ற இந்த மந்திரத்தை 16 முறை பிரம்மமுகூர்த்தத்தில் ஒலிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பஞ்சபூத தோஷங்கள் அனைத்தும் விலகும். பஞ்சபூதங்களை நம்பி தொழில் புரிபவர்கள், பஞ்சபூதங்களால் ஆபத்துக்கள் ஏற்படுபவர்கள், பஞ்சபூதத் தோஷங்கள் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு ஜெபிக்க வேண்டும்