'தனி
ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்.' என்று முழங்கிப்
பெற்ற சுதந்திரம் ஒருபுறம் இருக்க, நந்தவனத்தில் ஒரு ஆண்டிகூத்தாடி போட்டு
உடைத்தாண்டி' என்ற நிதர்சனமான உண்மை நிலை மறுபுறம் கண்கூடாகத் தெரிகிறது.
இந்தச் சூழ்நிலையில் அனைவரது மனங்களிலும் இனம் புரியாத கவலைகளும்,
கிலேசங்களும் கேள்விக் குறியாக நிற்கின்றன. விளைவுகளை எண்ணிப் பார்க்கக்
கூடிய தைரியமும், புத்திக் கூர்மையும் வேகமாக மறைந்து கொண்டே வருகின்றன.