ரூஸ்வெல்டு எப்படி தேச நலத்திலும் தேச மக்கள் நன்மையிலும் கருத்துக்கொண்டு பல சட்டங்களைச் செய்து அவற்றின் வாயிலாக உதவி புரிந்து வந்தாரோ, அது போலவே, அவரது மனைவியான எலியனார் ரூஸ்வெல்டு பொதுநல சேவையில் ஈடுபட்டு, முக்கியமாகப் பெண்ணுலகுக்குத் தம்மாலான தொண்டு புரிந்து வந்தார்.