இந்த நேர்காணலில் கவிதை குறித்த பல நுட்பமான தன் பார்வைகளை மனம் திறந்து பேசுகிறார்; கவிதையைத் தான் எப்படி உருவாக்குவேன் என்பது குறித்தெல்லாம் விரிவாகப் பேசுவது எனக்குள் வியப்பாக விரிந்தது. அவருடைய வாழ்க்கையையும், கவிதைப் பயணத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த நேர்காணல் கூடுதலாகப் பயன்படுமென்று உறுதியாக நம்புகிறேன். விமர்சன பூர்வமான என் வினாக்களுக்கும் கூட முகம் சுழிக்காமல் அவர் பதில் கூறிய அந்தப் பெருந்தன்மை யாருக்கு வாய்க்கும்? நூல்வடிவம் பெறும் இந்த நேர்காணலை அவர் பார்த்து வாசிக்க இயலாமல் போயிற்றே என்ற பெருந்துன்பத்தை எதைக்கொண்டு எதிர்கொள்வது?