கி.ரா. எழுதிய கடிதங்கள் எல்லாம் நான்கு தொகுதிகளுக்கு மேல் வரலாம். அவ்வளவு எழுதியிருக்கிறார், பெரியவர் சிறியவர்) என்ற பேதமில்லாமல் யார் யாருக்கோ எழுதியிருக்கிறார்.கி.ரா. வின் கடிதங்களுக்குரிய தனிச்சிறப்பு அவை சொந்த விவகாரங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கின்றன என்பதுதான். பரிமாறப்படும் கருத்துக்கள் எழுதிய இடமான இடைசெவலுக்கும், எழுதப்பட்ட ஓர் இடத்துக்கும் இடையில் போய் வந்து நின்று, போகும் பொருளாக இல்லாமல், சம காலத்து இலக்கிய உண்மைகளாக சமகாலத்து வரலாற்றுச் செய்திகளாக, சமகாலத்துச் சமுதாய நிகழ்ச்சிகளாக அமைந்துள்ள .இலக்கியம் பற்றித்தான் எத்தனை குறிப்புகள்! இலக்கியப் படைப்பாளிகள் யார் தான் இடம்பெறவில்லை? சமகாலத்தவர்கள், முதியவர்கள் என்று பலரும் வருகிறார்கள். புதிய இலக்கியம் படை ப் ப வ ர் க ளு க் கு ஆலோசனைகள், பாராட்டு க ள், வழிகாட்டல்கள்... பதிப்பாளர், வெளியீட்டாளர், பத்திரிகைத் துறையினர் அனைவருக்கும் பயன்படும் குறிப்புகள். இப்படி கி.ரா.வின் கடிதங்கள் அனைத்தும் இலக்கியமாய், வரலாறாய், விரிகின்றன.