லால்குடி சப்தரிஷி ராமாமிர்தமே லா.ச.ரா. வார்த்தைச் சித்தர், கந்தர்வ கதைச்சொல்லி, சொல்லின் செல்வர், சௌந்தர்ய உபாசகர், மணிபிரவாள மன்னர், மனங்கவர் கள்வர் பதினேழு வயதில் சிறுகதை எழுதத் தொடங்கினார். ஐம்பதாவது வயதில் புத்ர நாவல் எழுதினார். எழுபத்து நான்காம் வயதில் சிந்தா நதி - தன் வரலாற்று நூலுக்கு சாகித்ய விருது பெற்றார். இந்த நூலில் புத்ர, அபிதா, சௌந்தர்ய என மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன.இவரது படைப்புகளில் நிகழ்ச்சிகள் சரித்திரமாகும், சரித்திரம் நினைவாகும் நினைவு கதையாகும். இவர் எழுத்துக்கள் கதையைச் சொல்லிச் சொல்லி, நினைவின் ஊறலில் சொல்லின் பிசிர்விட்டு பாஷை மெருகேறி, விஷயம் துல்லியமாகி நம் ரத்தத்தில் தோய்ந்து மனதையும் மாண்பையும் ஊட்டி வளரப்பன. என்பார் இவரது மகன் சப்தரிஷி.