திருமிகு. மு.பெ. சத்தியவேல் முருகனார் எனது நீண்டகாலத் தோழர். அண்ணாமலைப் பல்கலைக் கழக்த்தில் பொறியியல் பட்டம் பெற்று, தமிழக் மின்வாரியத்தில் உதவிச் செயற்பொறியாளராகப் பணியாற்றியவர். தமிழிற்காகவும், தமிழ் மறைக்காகவும், நல்ல சம்பளத்துடன் கூடிய அந்தப் பணியிலிருந்து விலகி, தமிழ்ப் பணியை அறப்பணியாய் ஆக்கிக் கொண்டவர். ஆகம நெறி பிறழாது ஆயிரத்திக்கும் அதிகமான ஆலயங்களுக்கு தமிழில் குடமுழுக்குகளை செய்தவர்.அறநூறுக்கும் அதிகமான தமிழ்த் திருமணங்களை நடத்தியவர். சிறந்த கவிஞர். சிறந்த உரையாசிரியர் எல்லாவற்றிற்கும் மேலாக மானுட இலக்கியத்திற்கு இவர் ஒரு உரைகல்.