அருகே ஒரு பெருந்தழல் சட்டென்று எண்ணெய் பட்டு எழுந்தாடி அணைந்ததுபோல அம்மா முகத்தில் ஓர் உக்கிரம் படிந்து மறைந்தது. நான் அவளை அப்போது மிக அஞ்சினேன். அவள்மீது ஒண்டிக்-கொண்டு அந்த பயத்தை வென்றேன். என் அம்மாவேதான். ஆமாம். திடமாக, மென்மையாக அருகே இருக்கும் அறிமுகம் மிக்க உடல்....