காதலில் மட்டுமே இந்த மாயாஜாலம் சாத்தியமாகும். ஒவ்வொரு காதலனையும் கேட்டுப் பாருங்கள்... என்னவள் என்னில் புகுந்த பின்தான் என்னையே நான் உணர்ந்தேன் என்று கூறுவான். அது ஏனோ தெரியவில்லை. அப்பா, அம்மா சொல்லியும் கேட்காதவர்கள் கூட காதலன் அல்லது காதலி சொல்லும்போதுதான் உடனடியாக கேட்கிறார்கள் - காதலின் மாயமா அது?
ஒவ்வொரு காதல் நினைவும் விசேஷமானதுதான்... அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும், அந்த உணர்வை காதலியிடம் அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட சந்தோஷம், பதட்டம், உணர்ச்சிப் பிரவாகம்.. மறக்க முடியாத பசுமையான நினைவுகள்.
காதல் குறித்து ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தபோது இன்றுதான் தேதி 12 ஆச்சே... 12 வகையான காதல் கருத்துக்களை எழுதலாமே என்று தோன்றியது...